மருத்துவ மாணவர்கள் விழிப்புணர்வு நடைபயணம்


மருத்துவ மாணவர்கள் விழிப்புணர்வு நடைபயணம்
x
தினத்தந்தி 20 March 2022 11:29 PM IST (Updated: 20 March 2022 11:29 PM IST)
t-max-icont-min-icon

உலக வாய் சுகாதார தினத்தையொட்டி புதுவையில் மருத்துவ மாணவர்கள் விழிப்புணர்வு நடைபயணம் சென்றனர். இதனை சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு தொடங்கி வைத்தார்.

உலக வாய் சுகாதார தினத்தையொட்டி புதுவையில் மருத்துவ மாணவர்கள் விழிப்புணர்வு நடைபயணம் சென்றனர். இதனை சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு நடைபயணம்
வாய் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், பொது மக்களிடையே விழிப்புணர்வை மேம்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20-ந் தேதி “உலக வாய் சுகாதார தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கருபொருள் "உங்கள் வாயால் பெருமைப்படுங்கள்" என்பதாகும்.
அதன்படி புதுச்சேரி மாநில சுகாதார சங்கம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், புதுச்சேரி பிரிவு மற்றும் பல் மருத்துவத் துறை, ஜிப்மர் ஆகியவை இணைந்து விழிப்புணர்வு நடைபயணத்தை நடத்தின.
உறுதிமொழி
கடற்கரை சாலை காந்திசிலை அருகில் தொடங்கிய இந்த நடைபயணத்தை சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் புதுச்சேரியில் உள்ள பல் மருத்துவமனைகளில் பயிலும் மாணவ-மாணவிகள், பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நடைபயணம் புஸ்சி வீதி, காந்திவீதி, நேருவீதி, மிஷன்வீதி வழியாக சென்று கடற்கரை காந்திதிடலில் முடிவடைந்தது. நடைபயணத்தில் கலந்து கொண்டவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர். முன்னதாக அனைவரும், வாய் சுகாதாரம் குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Next Story