உல்லாசத்துக்கு வர மறுத்ததால் ஆத்திரம்... கள்ளக்காதலியின் கழுத்தை அறுத்து கொன்ற டிரைவர்


உல்லாசத்துக்கு வர மறுத்ததால் ஆத்திரம்... கள்ளக்காதலியின் கழுத்தை அறுத்து கொன்ற டிரைவர்
x
தினத்தந்தி 21 March 2022 6:45 AM IST (Updated: 21 March 2022 6:45 AM IST)
t-max-icont-min-icon

உல்லாசத்துக்கு வர மறுத்த கள்ளக்காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கள்ளக்காதலனான டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

குன்றத்தூர், ஜெகநாதபுரம், சேக்கிழார் நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் லட்சுமி என்ற கண்ணம்மாள் (வயது 50). இவர், தனது கணவரை பிரிந்து, 3 மகள்களுடன் தனியாக வசித்து வந்தார். அங்குள்ள சிமெண்டு செங்கல் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வீட்டில் கண்ணம்மாள் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் உள்ளே கண்ணம்மாள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரது ஆடைகள் கிழிந்து, அரை நிர்வாணமாக கிடந்தார். போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், கண்ணம்மாளுக்கும், அதே சிமெண்டு செங்கல் தயாரிக்கும் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்த ராஜா என்ற கோவிந்தராஜ் (31) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்ததாக தெரிகிறது.

நேற்று முன்தினம் இரவு ராஜா குடிபோதையில் தனது கள்ளக்காதலி கண்ணம்மாள் வீட்டுக்கு சென்று அவருடன் தகராறு செய்தார். கண்ணம்மாளின் மகள்கள், அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

அதன் பிறகு மீண்டும் அங்கு வந்த ராஜா, கண்ணம்மாளை தன்னுடன் உல்லாசத்துக்கு வரும்படி அழைத்தார். அவர் மறுத்ததால், ராஜா வலுக்கட்டாயமாக கண்ணம்மாளை உல்லாசத்துக்கு அழைத்தார். இதனால் மீண்டும் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது கண்ணம்மாள், ராஜாவை தரக்குறைவாக திட்டியதாக தெரிகிறது.

இதில் ஆத்திரம் அடைந்த ராஜா, கத்தியால் கள்ளக்காதலி கண்ணம்மாளின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தலைமறைவாக இருந்த ராஜாவை குன்றத்தூர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story