ரொட்டி பால் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்


ரொட்டி பால் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 21 March 2022 7:21 PM IST (Updated: 21 March 2022 7:21 PM IST)
t-max-icont-min-icon

காரைக்கால் கல்வித்துறை அலுவலகத்தில் ரொட்டி பால் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்

புதுச்சேரி கல்வித்துறையில் பணியாற்றும் ரொட்டி பால் ஊழியர்கள், தங்களை தினக்கூலி ஊழியர்களாக மாற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்காலில் ரொட்டி பால் ஊழியர்கள் இன்று உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
காரைக்கால் மாவட்ட கல்வித்துறை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு ரொட்டி பால் ஊழியர்கள் கூட்டு போராட்டக்குழு பொறுப்பாளர்கள் வசந்தி, தனவள்ளி, சோமசுந்தரம், தமிழ்ச்செல்வி மற்றும் பலர் கலந்துகொண்டனர். ரொட்டி பால் ஊழியர்களை தினக்கூலி ஊழியர்களாக மாற்ற வேண்டும், முதல்-அமைச்சர் அறிவித்த ரூ.10 ஆயிரத்தை உடனே வழங்க வேண்டும், மே மாதத்திற்குரிய ஊதியம் மற்றும் போனஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள்  போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களுக்கு ஆதரவாக, காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் ஷேக் அலாவுதீன், துணைத்தலைவர் சந்தனசாமி, இணை பொதுச்செயலாளர் கலைச்செல்வன், மத்திய கூட்டமைப்பு காரைப்பகுதி பொறுப்பாளர் தண்டபாணி, ஒருங்கிணைந்த ஆசிரியர் நலச்சங்க தலைவர் ஜான் பிரிட்டோ ஆகியோர் கலந்துகொண்டனர்.


Next Story