தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
திருபுவனை அருகே வயறுவலியின் காரணமாக தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருபுவனை அருகே திருபுவனைபாளையம் கடலூர் சாலையை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 34), இவர் திருபுவனையில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் தீராத வயிற்று வலி காரணமாக சத்தியமூர்த்தி அவதிப்பட்டு வந்தார். இதற்காக தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இருப்பினும் நோய் குறைந்தபாடில்லை. இதனால் மனவேதனை அடைந்த சத்தியமூர்த்தி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக கலைச்செல்வி அளித்த புகாரின்பேரில் திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமாரவேல், உதவி சப்-இன்ஸ்பெக்டர் வசந்தராஜா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story