அரசு பள்ளி காவலர் திடீர் சாவு
அரியாங்குப்பம் அருகே அரசு பள்ளி காவலர் திடீரென ரத்த வாந்தி எடுத்து இறந்தார்
புதுச்சேரி கோரிமேடு இஸ்ரவேல் நகரைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி (வயது 59). இவர் அரியாங்குப்பத்தை அடுத்த மணவெளி தந்தை பெரியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இரவு நேர காவலராக பணியாற்றி வந்தார். இவர் 2 வருடத்திற்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
இந்த நிலையில் சில நாட்களாக சுந்தரமூர்த்திக்கு இருமல் அதிகமாக இருந்துள்ளது. இதற்கு அவர், மருந்து மாத்திரை எடுத்துக்கொண்டு நேற்று இரவு வேலைக்கு சென்றார். திடீரென்று உடல்நிலை மோசமாகி பள்ளி கழிவறையில் ரத்த வாந்தி எடுத்து சுந்தரமூர்த்தி பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து அவரது மனைவி பழனியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story