போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை ஜனநாயக தொழிலாளர் சங்கத்தினர் முற்றுகை
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை ஜனநாயக தொழிலாளர் சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.
புதுச்சேரி ஜனநாயக தொழிலாளர் சங்கத்தினர் (ஏ.ஐ.சி.சி.டி.யு.) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை மேட்டுப்பாளையத்தில் உள்ள வடக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு தொழிலாளர் சங்க ஒருங்கிணைப்பு தலைவர் மோதிலால் தலைமை தாங்கினார். இதில் ரமேஷ், சிவக்குமார். பாஸ்கர், முருகையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சட்டவிரோதமாக மூடப்பட்டுள்ள தனியார் ஆலையை திறந்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும். 240 நாட்களுக்கு மேல் பணி செய்தவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 8 மணி நேர முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு சீருடை, காலணி, காலுறைகளை புதிதாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
இதைத்தொடர்ந்து ஏ.ஐ.சி.சி.டி.யு. சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டசபை முன்பு மாதா கோவில் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
Related Tags :
Next Story