புதைவட மின்கம்பி அமைக்கும் பணியை விரைவாக முடிக்க வேண்டும்
வில்லியனூர் மாட வீதியில்புதைவட மின்கம்பி அமைக்கும் பணியை விரைவாக முடிக்க வேண்டும் என சிவா எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
வில்லியனூர் மாட வீதிகளில் மின்துறை மூலம் ரூ.1 கோடியே 89 லட்சம் மதிப்பில் புதைவட மின்கம்பி அமைக்கும் பணி கடந்த 14-ந் தேதி தொடங்கப்பட்டது. இந்த கோவிலில் வைகாசி மாத உற்சவம் இந்த ஆண்டு விரைவில் கொண்டாடப்பட உள்ளது. அப்போது தேரோட்டத்தை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதனால் புதைவட மின்கம்பி அமைக்கும் பணியை விரைந்து முடிக்க தொகுதி எம்.எல்.ஏ.வும் எதிர்க்கட்சி தலைவருமான சிவா நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் புதுச்சேரி உப்பளத்தில் உள்ள மின்துறை தலைமை அலுவலகத்தில், அதன் தலைவர் சண்முகத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது வைகாசி மாத திருவிழா தொடங்குவதற்குள் புதைவட மின்கம்பி அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும், எரியாத தெரு விளக்குகளை சீரமைக்க வேண்டும், சேதமடைந்துள்ள மின் கம்பங்களை மாற்ற வேண்டும், குறைந்த மின் அழுத்தம் உள்ள பகுதிகளில் புதிய டிரான்ஸ்பார்மர்களை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்போது மின்துறை கண்காணிப்பு பொறியாளர் ஸ்ரீதர், செயற்பொறியாளர்கள் ராமநாதன், ஜானகி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story