மாணவியிடம் சில்மிஷம் செய்த பள்ளி தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது


மாணவியிடம் சில்மிஷம் செய்த பள்ளி தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது
x
தினத்தந்தி 22 March 2022 10:05 PM IST (Updated: 22 March 2022 10:05 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாணவியிடம் சில்மிஷம் செய்த பள்ளி தலைமை ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

செய்யாறு,  

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா சட்டுவந்தாங்கல் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் 9 வயது மதிக்கத்தக்க மாணவிைய அதே பள்ளியின் தலைமை ஆசிரியர் 9-ந்தேதி ஆடைகளை களைந்து பாலியல் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. வீட்டுக்கு வந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை தாயாரிடம் கூறி, இனிமேல் நான் பள்ளிக்குச் செல்ல மாட்டேன், என தெரிவித்து கண்ணீர் விட்டு கதறி அழுததாகத் தெரிகிறது. அதிர்ச்சி அடைந்த தாய் தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து 20-ந்தேதி சிறுமியின் தந்தை பள்ளிக்குச் சென்று, தலைமை ஆசிரியரான ராமலிங்கத்திடம் கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நந்தினிதேவி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமை ஆசிரியர் ராமலிங்கத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story