75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகள் நடைபயணம்


75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு  மாணவ, மாணவிகள் நடைபயணம்
x
தினத்தந்தி 22 March 2022 11:47 PM IST (Updated: 22 March 2022 11:47 PM IST)
t-max-icont-min-icon

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகளின் நடைபயண நிகழ்ச்சி நடந்தது.

புதுச்சேரி தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சுதந்திரத்துக்காக போராடிய வீரர்களின் பெருமையை எடுத்து சொல்லும் வகையிலும், சுதந்திர திருநாளை கொண்டாடும் வகையிலும் கல்லூரி மாணவ, மாணவிகளின் நடைபயண நிகழ்ச்சி நடந்தது. சபாநாயகர்  செல்வம்   கலந்து கொண்டு நடை பயணத்தை தொடங்கி வைத்தார்.
முன்னதாக அவர் தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் கல்லூரி வளாகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் பெயரில் அமைக்கப்பட்டிருந்த சமூக காட்டின் பெயர் பலகையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., கல்லூரி முதல்வர் சக்காந்ததாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்

Next Story