வரும் கல்வியாண்டுக்கான பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணி 90 சதவீதம் நிறைவு


வரும் கல்வியாண்டுக்கான பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணி 90 சதவீதம் நிறைவு
x
தினத்தந்தி 23 March 2022 12:38 AM IST (Updated: 23 March 2022 12:38 AM IST)
t-max-icont-min-icon

வரும் கல்வியாண்டுக்கான பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணி 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6 கோடி பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு அச்சிடும் பணிகளை தமிழகத்தை சேர்ந்த அச்சக நிறுவனங்களுக்கு வழங்காமல், அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த அச்சக நிறுவனங்களுக்கு வழங்கப்படுவதாக சமீபத்தில் புகாரும் எழுந்தன.

இந்நிலையில் 2022-23-ம் கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி தமிழகத்தை சேர்ந்த அச்சக நிறுவனங்களுக்கே வழங்கப்பட்டு இருப்பதாகவும், அந்த வகையில் 97 அச்சக நிறுவனங்கள் இந்த பாடப்புத்தகங்களை அச்சிடும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி, வரும் கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி 90 சதவீதம் வரை நிறைவு பெற்று இருக்கிறது என்றும், விரைவில் மீதம் இருக்கும் புத்தகங்களும் அச்சிடப்பட்டு, சரியான நேரத்தில் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் பாடநூல் கழகம் தரப்பில் கூறப்படுகிறது.

Next Story