நெல்லை அருகே லாரி மோதி 37 ஆடுகள் சாவு...!


நெல்லை அருகே லாரி மோதி 37 ஆடுகள் சாவு...!
x
தினத்தந்தி 23 March 2022 3:51 AM GMT (Updated: 2022-03-23T10:02:15+05:30)

நெல்லையில் அசுர வேகத்தில் வந்த லாரி மோதியதில் 37 ஆடுகள் பலியாகின.

நெல்லை,

நெல்லை அருகே உள்ள நடுக்கல்லூரை சேர்ந்தவர் நாகராஜன். இவர் இன்று காலை தனக்குச் சொந்தமான 100 ஆடுகளை கல்லூர் ரெயில்வே கேட் அருகே மேய்ச்சலுக்காக நடத்தி சென்று கொண்டு இருந்தார். 

அப்போது அங்குள்ள திருப்பத்தில் ஆடுகள் சென்று கொண்டிருந்தபோது கல்லூர் சீதபற்பநல்லூர் சாலை திருப்பத்தில் கிரஷர் மணல் ஏற்றி அசுர வேகத்தில் வந்த லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் ஆடுகள் கூட்டத்தில் மீது பாய்ந்தது. 

இதில் 37 ஆடுகள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து தகவலறிந்த சுத்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தலைமறைவான லாரி டிரைவரை போலீஸார் தேடி வருகின்றனர் ஆடுகள் கூட்டத்தில் லாரி மோதி 37 ஆடுகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story