வெற்றி-தோல்வி சகஜம்..! எங்கள் இடத்தை நாங்கள் பிடிப்போம் - பிரேமலதா விஜயகாந்த்


வெற்றி-தோல்வி சகஜம்..! எங்கள் இடத்தை நாங்கள் பிடிப்போம் - பிரேமலதா விஜயகாந்த்
x
தினத்தந்தி 23 March 2022 1:10 PM IST (Updated: 23 March 2022 1:10 PM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல் டீசல் விலை விலை உயர்வை திரும்ப பெற பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

திருச்சி,

திண்டுக்கல்லில் நடைபெற உள்ள கட்சி நிர்வாகி இல்ல காதணி விழாவில் கலந்து கொள்வதற்காக தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தார். அவருக்கு கட்சி தொண்டர்கள் சால்வை, மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில்,

பெட்ரோல் டீசல் விலை உயர்வு சாமானிய மக்களை பாதிக்கும். இது எந்த விதத்திலும் நியாயமில்லை காலகட்டத்தில் பலர் வேலையிழந்து உள்ள நிலையில் அனைத்து விலைவாசியும் உயர்ந்து உள்ளது. கேஸ் விலை உயர்வு மக்களை அதிகமாக பாதிக்கும் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் அரசு சுமைகளை மக்கள் மீது சுமத்த கூடாது மக்களுக்காகத்தான் அரசு உள்ளது. 

தி.மு.க., அ.தி.மு.க.விற்கு அடுத்தபடியாக தே.மு.தி.க. என்று இருந்த நிலையில் தற்போது அந்த கட்சி தோல்வி அடைந்துள்ளது என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு எல்லாக் கட்சியும் அப்படித்தான், வெற்றியும் தோல்வியும் சகஜம். கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத கட்சி தற்பொழுது ஆட்சியில் உள்ளது. ஆட்சியில் இருந்த கட்சி தற்போது ஆட்சி இல்லாமல் இருக்கிறது. அரசியலில் இதெல்லாம் சகஜம் எங்கள் இடத்தை நாங்கள் பிடிப்போம் என்றார்.

மேலும் தாலிக்கு தங்கம், திருமண உதவி தொகை திட்டம் ஆகியவற்றை மீண்டும் தொடர வேண்டும். பெண்களுக்கான எந்த திட்டத்தையும் இந்த அரசு நிறுத்தி வைக்கக்கூடாது. ஆளும் கட்சிக்கு ஏற்றமாதிரி திட்டத்தின் பெயரை மாற்றி திட்டத்தைத் தொடரலாம் என தெரிவித்தார்.

Next Story