தென்காசியில் லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து - போலீசார் விசாரணை...!
தென்காசி அருகே இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகிரி,
நாமக்கல் மாவட்டம் மோகனூர் லத்திவாடியைச் சேர்ந்த பெரியண்ணன் மகன் விக்னேஷ் வயது( வயது 27). இவர் நாமக்கல்லில் இருந்து தனது லாரியில் முட்டைகளை ஏற்றி கொண்டு கேரளா மாநிலம் கொல்லம் செல்வதற்காக தென்காசி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிவகிரி காப்பி கொட்டைத் தோட்டம் அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஹார்விபட்டியைச் சேர்ந்த ராமர் மகன் தினேஷ்குமார் வயது (26) என்பவர் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் இருந்து பழைய பிளாஸ்டிக் பொருட்களை லாரியில் ஏற்றிக்கொண்டு மதுரை செல்வதற்காக சிவகிரியை நோக்கி வந்து கொண்டிருந்தது.
இந்த இரண்டு லாரிகளும் காப்பி கொட்டைத் தோட்டம் அருகே வந்தபோது நேருக்கு நேர் மோதி கொண்டது. இந்த விபத்தில் லாரிகளின் முகப்புகள் மிகுந்த சோதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக லாரியின் டிரைவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இருந்த போதிலும் லாரியில் இருந்த முட்டைகள் முற்றுலும் சேதம் அடைந்தது.
இதுகுறித்து லாரி டிரைவர் விக்னேஷ் கொடுத்த புகாரின் போரில் சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story