சாமி வீதியுலாவில் கோஷ்டி மோதல்
காலாப்பட்டு அருகே சாமி வீதியுலாவில் கோஷ்டிகளாக மோதிக் கொண்டதில் 2 பேர் காயமடைந்தனர். 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
காலாப்பட்டு அருகே சாமி வீதியுலாவில் கோஷ்டிகளாக மோதிக் கொண்டதில் 2 பேர் காயமடைந்தனர். 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கோவில் விழா
காலாப்பட்டு அருகே பிள்ளைச்சாவடியில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் பின்புறம் அய்யனாரப்பன் கோவில் உள்ளது. தமிழக பகுதியான இங்கு கடந்த 2 நாட்களுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி அன்று இரவு சாமி வீதியுலா நடைபெற்றது.
அப்போது பிள்ளைச்சாவடியை சேர்ந்த மாரியப்பன் (வயது 24) தரப்பினரும், ஆனந்த் (50) தரப்பினரும் திடீரென கோஷ்டிகளாக மோதிக் கொண்டனர்.
முதலில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள் அதன்பின் இரும்பு குழாய் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். இதில் இருதரப்பையும் சேர்ந்த மாரியப்பன், ஆனந்த் ஆகியோர் படுகாயமடைந்தனர். இருவரும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
8 பேர் மீது வழக்கு
இந்த மோதல் தொடர்பாக இருதரப்பினரும் தனித்தனியே காலாப்பட்டு போலீசில் புகார் அளித்தனர். மாரியப்பன் அளித்த புகாரின்பேரில் அரவிந்த், சிவகுரு, சக்திகுரு உள்பட 4 பேர் மீதும், ஆனந்த் அளித்த புகாரின்பேரில் வேலு, ரகு, மாரியப்பன் உள்பட 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இருதரப்பு மோதல் காரணமாக பிள்ளைச்சாவடி கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை இருந்து வருகிறது. அங்கு அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story