நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் தொடர் போராட்டம்
அரசு சம்பளம் வழங்கக்கோரி நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.
நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு அரசே நிதி ஒதுக்கீடு செய்து சம்பளம், ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்று நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கூட்டு போராட்டக்குழுவினர் வலியுறுத்தி வருகின்றனர். அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 21-ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று அவர்களது போராட்டம் 3-வது நாளாக நீடித்தது. விடுப்பு எடுத்து அவர்கள் உள்ளாட்சித்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல் குடிசை மாற்று வாரிய ஊழியர்களும் சம்பளம் வழங்கக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று அவர்கள் அலுவலக வளாகத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.
Related Tags :
Next Story