மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைப்பு


மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைப்பு
x
தினத்தந்தி 23 March 2022 11:11 PM IST (Updated: 23 March 2022 11:11 PM IST)
t-max-icont-min-icon

முன்விரோதம் காரணமாக மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்த சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுசசேரி லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் சண்முகாநகரை சேர்ந்தவர்  புஷ்பராஜ். இவரது நண்பர் பிரதீப். இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 30) என்பவரது காரை உடைத்து சேதப்படுத்தினர். இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கார்த்திக், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனுடன் சேர்ந்து புஷ்பராஜ் மற்றும் பிரதீப்பின் மோட்டார் சைக்கிள்களை தீ வைத்து கொளுத்தியதாக கூறப்படுகிறது. இதில் 2 மோட்டார் சைக்கிள்களும் எரிந்து நாசமானது. இதுகுறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் கார்த்திக் மற்றும் சிறுவனை கைது செய்தனர்.


Next Story