புதிதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு


புதிதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 23 March 2022 11:20 PM IST (Updated: 23 March 2022 11:20 PM IST)
t-max-icont-min-icon

புதுவையில் புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 441 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் புதுச்சேரியை சேர்ந்த ஒரே ஒருவருக்கு மட்டும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது 10 பேர் மட்டும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 2 பேர் குணமடைந்தனர்.
புதுச்சேரியில் நேற்று முதல் தவணை தடுப்பூசியை 1,913 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 1,158 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 71 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 16 லட்சத்து 19 ஆயிரத்து 376 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

Next Story