பல் மருத்துவ படிப்பில் சேர புதிதாக விண்ணப்பிக்கலாம்
பல் மருத்துவ படிப்பில் சேர புதிதாக விண்ணப்பிக்கலாம் என சென்டாக் தகவல் தெரிவித்துள்ளது.
புதுவையில் உள்ள அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் பல் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 2 முறை நடத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் பல் மருத்துவ படிப்பில் சேர தகுதியானவர்கள் புதிதாக விண்ணப்பிக்கலாம் என்று சென்டாக் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ரகவுடு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், நீட் தேர்வு அடிப்படையில் தகுதி பெற்ற மாணவர்கள் பல் மருத்துவ படிப்பில் சேர புதிதாக விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ள மாணவர்கள் நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) வரை சென்டாக் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களையும் இணையத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story