ஐஸ் கட்டி மீது பிணத்தை வைக்கும் அவலம்


ஐஸ் கட்டி மீது பிணத்தை வைக்கும் அவலம்
x
தினத்தந்தி 23 March 2022 11:29 PM IST (Updated: 23 March 2022 11:29 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சவக்கிடங்கில் குளிர்சாதன எந்திரம் பழுதானதால் ஐஸ் கட்டி மீது பிணத்தை வைக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

புதுவை பிராந்தியமான ஏனாமில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்குள்ள சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ள குளிர்சாதன எந்திரம் பழுதானது. இதனை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
எனவே இறந்தவர்களின் உடல் ஐஸ் கட்டிகளின் மீது வைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ஆஸ்பத்திரி சவக்கிடங்கில், இறந்தவர் ஒருவரின் உடல் திறந்தவெளியில் ஐஸ் கட்டிகளின் மீது கிடத்தி வைத்திருப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.


Next Story