வீடுகளில் தங்கியுள்ள காவலர்கள் வெளியேற உத்தரவு
கோரிமேடு ஆயுதப்படை வளாகத்தில் வீடுகளில் தங்கியுள்ள காவலர்கள் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் பயிற்சி காவலர்கள் தங்குவதற்கான வீடுகள் உள்ளன. பணியின் நிமித்தமாக தொலைவில் இருந்து வரும் காவலர்கள் இங்கு தங்குவது வழக்கம். தற்போது இங்கு புதுவை, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகளை சேர்ந்த 45 காவலர்கள் தங்கியுள்ளனர்.
இதற்கிடையே காவல்துறை தலைமை அலுவலக சூப்பிரண்டு ரவிக்குமார் 45 காவலர்களையும் உடனடியாக வீடுகளை காலி செய்து வெளியேறுமாறு உத்தரவிட்டார். இந்த திடீர் உத்தரவால் அங்கு தங்கியிருந்த காவலர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர். மாற்று ஏற்பாடு செய்யாததால் உடனடியாக வீடுகளை காலி செய்ய முடியவில்லை. மேலும் அங்கு தங்கியிருந்தவர்களின் உடைமைகளை அகற்றப்பட்டதாக தெரிகிறது.
இதற்கிடையே தற்போது காவல்துறையில் புதிதாக 390 காவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு விரைவில் பயிற்சிகள் தொடங்கப்பட உள்ளது. அவர்களை அங்கு தங்க வைப்பதற்காக வீடுகளை காலி செய்ய உத்தரவிட்டதாக தெரிகிறது. இருப்பினும் முன் அறிவிப்பு இல்லாமல் பொருட்களை அகற்றியது அங்கு தங்கியிருந்த காவலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story