சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் இறந்த 3 புள்ளி மான்களுக்கு ‘ஆந்த்ராக்ஸ்’ இல்லை
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் இறந்த 3 புள்ளி மான்களுக்கு ‘ஆந்த்ராக்ஸ்’ இல்லை உடற்கூறு சோதனையில் தகவல்.
சென்னை,
தமிழ்நாடு முதன்மை வன பாதுகாவலர், தலைமை வன உயிரின காப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் சுமார் 400 புள்ளி மான்கள் உள்ளன. இந்தநிலையில் கடந்த 17-ந்தேதி 3 புள்ளி மான்கள் இறந்ததாக தகவல் கிடைத்தது. சென்னை மாவட்ட வன உயிரின காப்பாளர் முன்னிலையில் கிண்டி சிறுவர் பூங்காவில் உள்ள கால்நடை மருத்துவ குழுவினர் மூலம் இறந்துபோன மான்களுக்கு உடற்கூறு சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் ரத்தம் மற்றும் சதை மாதிரிகள் எடுக்கப்பட்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மத்திய ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது.
ஆய்வு முடிவு அறிக்கை கடந்த 22-ந்தேதி கிடைக்க பெற்றது. அதன்படி, ரத்தம் மற்றும் சதை மாதிரிகளில் ஆந்த்ராக்ஸ் கிருமியின் தொற்று எதுவும் இல்லை என கண்டறியப்பட்டது.
எனவே இந்த 3 புள்ளிமான்களின் மரணம் ஆந்த்ராக்ஸ் நோயினால் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story