சசிகலாவை அ.தி.மு.க.வில் இணைக்க வாய்ப்பு இல்லை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
சசிகலாவை அ.தி.மு.க.வில் இணைக்க வாய்ப்பு இல்லை என்று திருச்சியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
திருச்சி,
தி.மு.க. தொண்டர் தாக்கப்பட்ட வழக்கு உள்ளிட்ட 3 வழக்குகளில் கைதாகி நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ள அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கோர்ட்டு உத்தரவின் பேரில் திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.
நேற்று 5-வது முறையாக அவர் கையெழுத்திட்டார். பின்னர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்தபோது மற்ற மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலையை அந்தந்த மாநில அரசுகள் குறைத்தன. ஆனால் தி.மு.க. அரசு குறைக்கவில்லை. மாநில அரசுகள் திட்டங்களை செயல்படுத்துவதில் நிதி பற்றாக்குறை ஏற்படும் என்பதால் பெட்ரோல், டீசல் ஆகியவற்றினை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர கூடாது என்பதில் ஜெயலலிதா உறுதியான நிலைப்பாடு எடுத்தார்.
ஆனால் தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவோம் என்று சொன்னது. தி.மு.க.வில் கட்சியில் ஒரு நிலைப்பாடும், ஆட்சியில் ஒரு நிலைப்பாடும் என்று முரண்பட்டு இருக்கிறார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் ஆசைவார்த்தைகளை கூறி கூடுதலாக 3 சதவீத வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்து விட்டார். 2026-ல் கூடுதலாக 10 சதவீத வாக்குகளைப் பெற்று அ.தி.மு.க. மகத்தான ஆட்சியை அமைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சசிகலா அ.தி.மு.க.வில் சேர்க்கப்படுவாரா?
பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா தொடர்பாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சாட்சியம் அளித்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்:- விசாரணை ஆணையத்தின் சாட்சியங்கள் முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் நான் எந்தக் கருத்தைச் சொன்னாலும் அது விசாரணைக்கு குந்தகம் விளைவிப்பதாக இருக்கும்.
கேள்வி:-சசிகலாவை அ.தி.மு.க.வில் மீண்டும் இணைக்க வாய்ப்பு உள்ளதா?
பதில்:- சசிகலாவை நீக்கியது கட்சி எடுத்த முடிவு. நேற்றும் சரி, இன்றும் சரி, நாளையும் சரி ஒரே முடிவு தான். அதில் எந்த மாற்றமும் இல்லை.
கேள்வி:- தனிப்பட்ட முறையில் உங்களுக்கு சசிகலா மீது மரியாதை இருக்கிறதா?
பதில்:- இதற்கு நான் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை.

Related Tags :
Next Story