பொது நகைக்கடன் தள்ளுபடிக்காக நேற்று ஆயிரம் கோடி ரூபாய் விடுவிப்பு - அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடிக்காக ரூ. 1,000 கோடி நேற்று விடுவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஐ. பெரியசாமி சட்டசபையில் தெரிவித்தார்.
சென்னை
சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கேள்வி நேரம் நடைபெற்று வருகின்றன. இன்று காலை கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி சட்டசபையில் பேசும் போது கூறியதாவது:-
தமிழகத்தில் பொது நகைக்கடன் தள்ளுபடிக்காக ரூ. 1,000 கோடி நேற்று ஒரே நாளில் விடுவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 5,48,000 நகைக் கடன்கள் தள்ளுபடி செய்து ரசீது தரப்பட்டுள்ளன.
மார்ச் 31ஆம் தேதிக்குள் அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் எனக் கூறியிருந்தேன். ஆனால், 3 நாள்கள் முன்னதாக மார்ச் 28ஆம் தேதியே அனைவருக்கும் தள்ளுபடி ரசீதுகள் தரப்படும் என நம்புகிறேன்” என கூறினார்.
Related Tags :
Next Story