மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி
பாகூர் கஸ்தூரிபாய் காந்தி அரசு பள்ளியில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது.
பாகூர் கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி முகாம் தொடக்க விழா நடந்தது. பள்ளியின் துணை முதல்வர் சண்முகம் தலைமை தாங்கினார். உடற்கல்வி ஆசிரியை சிவமதி வரவேற்றார். தலைமை ஆசிரியர் கிளாடின் கிரேஸ் மெக்பர்லேன் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் பிரபாவதி, அருளரசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் கராத்தே பயிற்சியாளர் பாலச்சந்தர் தற்காப்பு கலையின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். பயிற்சியாளர்கள் ஸ்ரீஜா, காயத்ரி ஆகியோர் தற்காப்பு கலை குறித்து பயிற்சி அளித்தனர். இதில் மாணவிகள் சுமார் 120 பேர் கலந்துகொண்டனர். முடிவில் ஆசிரியர் சரவணன்குமார் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் அருமைச்செல்வி, லலிதா ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story