மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி
புதுவையில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நாளை தொடங்குகிறது.
அகில இந்திய கூடைப்பந்து சம்மேளனம் மற்றும் புதுச்சேரி கூடைப்பந்து கழகம் சார்பில் மாநில அளவிலான மூவர் கூடைப்பந்து போட்டி உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 27-ந் தேதி வரை நடக்கிறது. பல்வேறு பிரிவுகளாக நடைபெறும் இந்த போட்டியில் 18 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் 36 அணியும், பெண்கள் பிரிவில் 20 அணியும் கலந்து கொள்கின்றன. சீனியர் பிரிவில் 53 ஆண்கள் அணியும், 15 பெண்கள் அணியும் களம் காணுகின்றன.
போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு முதல் பரிசாக ஆண்கள் பிரிவில் ரூ.30 ஆயிரமும், பெண்கள் பிரிவில் ரூ.20 ஆயிரமும் வழங்கப்படும். இந்த போட்டிகளில் முதல் இடத்தை பெறும் அணிகள் பெங்களூருவில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதிபெறும்.
Related Tags :
Next Story