காமராஜர் பெயரில் கல்லூரி மேம்பாட்டு திட்டம்: தமிழக அரசின் அறிவிப்புக்கு பல்வேறு அமைப்புகள் பாராட்டு
ரூ.1,000 கோடியில் காமராஜர் பெயரில் கல்லூரி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு பல்வேறு அமைப்புகள் பாராட்டு தெரிவித்துள்ளன.
சென்னை,
தமிழக சட்டசபையில் நேற்று நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், காமராஜர் பெயரில் ரூ.1,000 கோடியில் கல்லூரிகளை மேம்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும் என நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.
தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு அமைப்புகள் பாராட்டு தெரிவித்துள்ளன.
பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழகத்தை பொறுத்தவரை காமராஜர் பெயரில் எந்த வளர்ச்சி திட்டத்தை அறிவித்தாலும் அது மக்களுக்கு பயன்தரும் வகையில் இருக்கும். காமராஜர் பெயரை சூட்டுவதால் அத்திட்டத்துக்கு பெருமை. இத்திட்டத்துடன் தமிழக அரசு புதிதாக அறிவித்துள்ள அரசு பள்ளிகளில் படித்து, கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் வழங்கும் திட்டத்தையும் இணைத்து காமராஜர் பெண்கள் கல்வி மேம்பாட்டு திட்டம் என பெயரிட்டு பெருமை சேர்க்க வேண்டும்’’, என்று கூறியுள்ளார்.
பாராட்டு
சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த அறிவிப்பின் மூலம் அரசுப்பள்ளி மாணவிகளின் கல்வித்தரம் உயரும். காமராஜர் கல்விக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளித்தாரோ அதே அளவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்வி வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி முதன்மை முதல்-அமைச்சராக திகழ்ந்து வருகிறார். இதற்காக முதல்-அமைச்சருக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்' என்று கூறி உள்ளார்.
தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் ஜெ.முத்துரமேஷ் நாடார் தனது அறிக்கையில், ‘இந்த புதிய அறிவிப்பை சட்டசபையில் வெளியிட்ட நிதி அமைச்சருக்கும் மற்றும் முதல்-அமைச்சருக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழக மக்களின் நீண்டநாள் கோரிக்கையான பெருந்தலைவர் காமராஜர் பெயரில் சென்னை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலும் ஆய்வு மாணவர்கள் பயனடையும் வகையில் காமராஜர் ஆய்வு இருக்கை அமைக்க வேண்டும். அதற்கு தமிழக அரசு ரூ.10 கோடி நிதி வழங்க முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்கிறோம்' என தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story