இரவு நேரத்தில் சைக்கிளில் ரோந்து வந்த போலீஸ் இணை கமிஷ்னர் ரம்யா பாரதி...!


இரவு நேரத்தில் சைக்கிளில் ரோந்து வந்த போலீஸ் இணை கமிஷ்னர் ரம்யா பாரதி...!
x
தினத்தந்தி 25 March 2022 9:43 AM IST (Updated: 25 March 2022 9:43 AM IST)
t-max-icont-min-icon

சென்னை வடக்கு மண்டல காவல் இணை கமிஷ்னர் ரம்யா பாரதி நேற்று நள்ளிரவு சைக்கிளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை,

சென்னை காவல்துறை வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யா பாரதி. இவர் நேற்றிரவு திடீரென சைக்கிள் மூலம் ரோந்து பணியில் ஈடுபட்டார்.  சுமார் ஒன்றரை மணி நேரம் சைக்கிளில் வடக்கு மண்டலத்தில் உள்ள 8 காவல் நிலையங்களுக்கு சைக்கிளிலேயே சென்று ஆய்வு பணி செய்தார்.  

சுமார் 9 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் ரோந்து சென்ற அவர் வடசென்னை பகுதிகளில், இரவு ரோந்து வாகன காவலர்கள் மற்றும் பீட் அதிகாரிகள், காவல்துறையினர் எவ்வாறு கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள் என ஆய்வு மேற்கொண்டார்.  

அப்போது காவல்துறையினர் விழிப்போடு பணியை மேற்கொள்ள இணை ஆணையர் ரம்யா பாரதி  காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார், மேலும் பொதுமக்களிடமும் கருத்துகளை கேட்டறிந்தார்.

Next Story