அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது நிர்வாக சீர்திருத்தத்துறை சுற்றறிக்கை
புதுவை அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது என்று நிர்வாக சீர்திருத்தத்துறை சுற்றறிக்கை விடுத்துள்ளது.
புதுச்சேரி
புதுவை அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது என்று நிர்வாக சீர்திருத்தத்துறை சுற்றறிக்கை விடுத்துள்ளது.
வேலைநிறுத்தம்
மத்திய அரசின் தொழிலாளர் விரோதப்போக்கு, தனியார்மயக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 28 மற்றும் 29-ந்தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. புதுச்சேரியிலும் இந்த வேலைநிறுத்த போராட்டம் நடத்தபோவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன.
சம்பளம் கிடையாது
இந்தநிலையில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் வழங்கப்படமாட்டாது என்று நிர்வாக சீர்திருத்தத்துறை சுற்றறிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து புதுவை அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலாளர் ஜெய்சங்கர் அரசு துறைகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு ஊழியர் சம்மேளனம் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது. இந்த போராட்டத்தில் புதுவை அரசு ஊழியர்களும் ஈடுபடப்போவதாக தகவல் கிடைத்துள்ளது.
ஒழுங்கு நடவடிக்கை
இந்த காலகட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு அவசர தேவை தவிர்த்து பிற காரணங்களுக்காக விடுமுறை அளிக்கக்கூடாது என்று அனைத்து துறைகளும் அறிவுறுத்தப்படுகின்றன. அதையும் மீறி ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் அவர்களுக்கு சம்பளம் மற்றும் இதர அலவன்சுகள் கிடையாது. அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம்.
வருகிற 28 மற்றும் 29-ந்தேதிகளில் ஊழியர்கள் வருகை, வராதது குறித்து நண்பகல் 12 மணிக்குள் முறையாக தகவல் தெரிவிக்கவேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story