வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறையில் இதுவரை இல்லாத அளவு வருவாய்: தமிழக அரசு
2021-22 ஆம் ஆண்டில் வணிகவரித்துறையில் இதுவரை ரூ.1 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
சென்னை,
வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறையில் இதுவரை இல்லாத அளவு வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 24.3.2022 தேதிவரை வணிகவரித்துறையில் ரூ.1,00,346.01 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது இலக்கை தாண்டிய வருவாய் ஆகும். அதே போல பதிவுத்துறையிலும் அதிக வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. 24.3.2022 ஆம் தேதி வரை பதிவுத்துறையில் ரூ.13,406.51 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டுக்கான நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை இது வரை இல்லாத அளவில் வணிகவரி மற்றும் பதிவுத் துறை ஆகிய இரு துறைகளும் கடந்து சாதனை படைத்துள்ளது.
Related Tags :
Next Story