பஸ்கள் மோதல்; 10 பேர் காயம்


பஸ்கள் மோதல்; 10 பேர் காயம்
x
தினத்தந்தி 25 March 2022 11:52 PM IST (Updated: 25 March 2022 11:52 PM IST)
t-max-icont-min-icon

தவளக்குப்பம் அருகே இரண்டு பஸ்கள் மோதிய விபத்தில் 10 பேர் காயம் அடைந்தனர்.

தவளக்குப்பம் அடுத்த டி.என்.பாளையம் கிராமத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். புதுச்சேரி-கடலூர் சாலையில் பூரணாங்குப்பம் பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்று பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தது. அப்போது கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற தனியார் ஆம்னி பஸ் நின்று இருந்த அரசு மீது பயங்கரமாக மோதியது.
கண்இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் 2 பஸ்களிலும் பயணம் செய்த அபிஷேகப்பாக்கத்தை சேர்ந்த முத்துசாமி (வயது 60), ராஜேஸ்வரி (51), சாரம் பகுதியை சேர்ந்த மஞ்சு (37) உள்பட 10 பேர் காயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story