நள்ளிரவில் தனி ஆளாக சைக்கிளில் ரோந்து சென்ற பெண் போலீஸ் இணை கமிஷனருக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து
நள்ளிரவில் தனி ஆளாக சைக்கிளில் ரோந்து சென்ற பெண் போலீஸ் இணை கமிஷனருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.
சென்னை,
வடசென்னை போலீஸ் இணை கமிஷனராக பணியாற்றி வரும் ரம்யா பாரதி, நள்ளிரவில் 9 கி.மீ. தூரம் சைக்கிளில் தனி ஆளாக ரோந்து பணி சென்றார்.
இந்தநிலையில் ரம்யா பாரதிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
ரம்யா பாரதிக்கு வாழ்த்துகள். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை குறைக்கவும், பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் டி.ஜி.பி.க்கு ஆணையிட்டுள்ளேன்.
தமிழ்நாடு காவல்துறை சட்டம்-ஒழுங்கை நிலை நிறுத்துவதில் இரும்புக்கரம் கொண்டு செயல்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story