கவர்னர் ஆர்.என்.ரவி இன்று குமரி வருகை
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று (சனிக்கிழமை) குமரிக்கு வருகிறார்.
கொல்லங்கோடு,
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று (சனிக்கிழமை) குமரி மாவட்டம் வருகிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வரும் அவர், பிறகு கார் மூலம் நாகர்கோவில் ராமவர்மபுரத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வருகிறார்.
அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு இரவில் கொல்லங்கோடு பத்திரகாளியம்மன் கோவிலில் நடைபெறும் தூக்கத்திருவிழா நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். அந்த நிகழ்ச்சி முடிவடைந்ததும் மீண்டும் அவர் கார் மூலம் நாகர்கோவில் வந்து அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.
தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை நாகர்கோவிலில் இருந்து கார் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். இதனையொட்டி குமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story