நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விடுபட்டுள்ள 62 பதவியிடங்களுக்கு இன்று மறைமுக தேர்தல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விடுபட்டுள்ள 62 பதவியிடங்களுக்கு இன்று மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து மார்ச் 4 ஆம் தேதி மறைமுக தேர்தலின்போது பல்வேறு காரணங்களுக்காக இடங்களுக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
அவ்வாறு விடுபட்டுள்ள 62 இடங்களில் நகராட்சித் தலைவர், துணைத்தலைவர்,பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுக தேர்தல் நடக்கிறது. காலை 9.30 முதல் மதியம் 2 மணி வரை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களில் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story