கோவை: அரசு பள்ளிக்கு தனது சேமிப்பு பணத்தில் காய்கறி வாங்கி கொடுத்த பள்ளி மாணவன்
கோவையில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர் சத்துணவு கூடத்திற்கு காய்கறிகள் வழங்கிய சம்பவம் அனைவரையும் நெகிழவைத்துள்ளது.
கோவை,
கோவை மாவட்டம், கணபதி அடுத்துள்ள ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சத்துணவு வழங்கும் கூடமும் செயல்பட்டு வருகிறது.
இதில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு அங்கு மதிய உணவு வழங்குவது வழக்கம். இந்தப் பள்ளியில் 8 ம் வகுப்பு படிக்கும் மாணவன் கோபிகிருஷ்ணா தன்னுடைய சொந்த சேமிப்பு பணத்தை கொண்டு இருமுறை சத்துணவு கூடத்திற்கு உணவு தயாரிப்பதற்காக காய்கறிகளை வாங்கி வந்து தலைமையாசிரியர் ஆனந்தகுமாரிடம் ஒப்படைத்துள்ளார்.
அவரது இந்த செயல் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள், அலுவலர்கள், மற்றும் மாணவ, மாணவியர்கள் அனைவரையும் நெகிழவைத்துள்ளது.
Related Tags :
Next Story