தட்டச்சு தேர்வு முறையில் மாற்றம்; மாணவ-மாணவிகள் அவதி...!
தட்டச்சு தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதால் மாணவ-மாணவிகள் அவதி அடைந்தனர்.
குன்னூர்,
தமிழக அரசின் தொழில் நுட்ப இயக்குநரகம் நடத்தும் தட்டச்சு தேர்வில் வெற்றி பெற்ற பின் கம்ப்யூட்டர் தேர்வில் வெற்றி பெற்றால்தான் தமிழக அரசு நடத்தும் வேலை வாய்ப்பிற்கான தேர்வில் கலந்து கொள்ள முடியும். இதற்காக பள்ளி படிப்பு முடிந்தவுடன் மாணவ-மாணவிகள் தட்டச்சு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய தட்டச்சு தேர்வில் சில மாற்றங்களை அரசு செய்துள்ளது.
இந்த நிலையில் குன்னூரில் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலப் பள்ளியில் இன்று தட்டச்சு தேர்வு நடைபெற்றது. இதில் சுமார் 150 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். தமிழக அரசு செய்துள்ள மாற்றத்தினால் மாணவ-மாணவிகள் சரியான முறையில் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்ப்பட்டது.
இது குறித்து தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் கூறியதாவது,
கடந்த 60 ஆண்டுகளாக தட்டச்சு தேர்வில் முதல் கட்டமாக வேக தட்டச்சு தேர்வு செயல்முறையில் இருந்தது. இரண்டாவது கட்டமாக ஸ்டேட்மெண்ட் மற்றும் கடிதங்களை தட்டச்சு செய்யும் தேர்வு இருந்தது. ஆனால் தற்போது ஸ்டேட்மெண்ட் மற்றும் கடிதங்கள் தட்டச்சு செய்யும் தேர்வு முதல் கட்டமாக வைத்து இன்று தேர்வு நடத்தப்பட்டது.
நேர குறைவின் காரணமாக . பதட்டத்துடன் இந்த தேர்வை எங்களால் சரியாக செய்ய முடியவில்லை. இதனால் எங்கள் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தட்டச்சு தேர்வில் பழைய முறையை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story