சமூகவலைதளம் மூலம் நட்பாகி காதல் 9 ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் போக்சோவில் வாலிபர் கைது
காரைக்காலில் சமூகவலைதளம் மூலம் நட்பாகி காதலித்து 9-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
காரைக்கால்
காரைக்காலில் சமூகவலைதளம் மூலம் நட்பாகி காதலித்து 9-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
உடல்நிலை பாதிப்பு
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு பகுதியில் 9-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவிக்கும், திருநள்ளாறு பேட்டை பகுதியை சேர்ந்த முருகவேல் மகன் மணிகண்டன் (வயது21) என்பவருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
இதுவே அவர்களுக்குள் காதலாக மாறியது. தொடர்ந்து பல முறை இருவரும் தனிமையில் சந்தித்த போது, மாணவியை மணிகண்டன் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் அந்த மாணவிக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து திருநள்ளாறு அரசு சமுதாய நல வழி மையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்ததில் மாணவி பலமுறை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது.
பெற்றோர் அதிர்ச்சி
இதுபற்றி அறிந்து மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு காரணம் யார்? என்பது குறித்து விசாரித்தபோது, நடந்த சம்பவத்தை அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, பெற்றோர் திருநள்ளாறு போலீசில் புகார் தெரிவித்தனர். அதன் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி மற்றும் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் காரைக்கால் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புதுச்சேரி சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story