காரைக்கால் மாவட்ட அரசு மருத்துவமனை கொரோனா வார்டுக்கு பூட்டு
காரைக்கால் மாவட்ட அரசு மருத்துவமனை கொரோனா வார்டு கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு பூட்டப்பட்டுள்ளது
கோட்டுச்சேரி
காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா நலவழித்துறை முன்களப் பணியாளர்கள் இடைவெளியின்றி மருத்துவமனைகள், சிறப்பு முகாம்கள், மருத்துவ மையங்கள், அரசுப் பள்ளிகளில் கொரோனா தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்தி வருகின்றனர்.
பொதுமக்களும் ஆர்வமுடன் தடுப்பூசிகளை போட்டு வருகின்றனர். இதனால்,கொரோனா பரவலின் தாக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது.இந்நிலையில், காரைக்கால் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று கண்டறியும் பிரிவில் கடந்த 2 நாட்களாக நோயாளிகள் வரவில்லை. மேலும், முன் களப்பணியாளர்களிடம் இருந்தும் கொரோனா தொற்றாளர்கள் குறித்த பரிந்துரைகளும் இல்லை.
கொரோனா தொற்று கண்டறியும் பிரிவு, அவசர சிகிச்சைப்பிரிவு போன்றவை நோயாளிகளின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது. இதனால் மருத்துவமனையின் கொரோனா வார்டு கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு பூட்டப்பட்டுள்ளது. ஒருவேளை இனி கொரோனா நோயாளிகள் இல்லாத சூழ்நிலையில் இங்கு வழக்கம்போல் மற்ற சிகிச்சைக்கான நோயாளிகள் படுக்கைகளில் அனுமதிக்கப்படுவார்கள்.
Related Tags :
Next Story