குமரி கடலில் ரூ.37 கோடியில் கண்ணாடி பாலம் - அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு


குமரி கடலில் ரூ.37 கோடியில் கண்ணாடி பாலம் - அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 26 March 2022 9:28 PM IST (Updated: 26 March 2022 9:28 PM IST)
t-max-icont-min-icon

குமரி கடலில் 37 கோடி ரூபாய் செலவில் கண்ணாடி நடைபாதை பாலம் அமைக்கப்பட உள்ளது.

கன்னியாகுமரி,

தமிழகத்தின் தென்கோடி முனையான கன்னியாகுமரி, சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பிச் செல்லக்கூடிய இடங்களில் ஒன்றாக விளங்குகிறது. குமரிக்கடலில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம், பகவதி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் சுற்றுலா பயணிகளை கவரக்கூடிய வகையில் அமைந்துள்ளன. 

இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகினறன. அதன் ஒரு பகுதியாக குமரிக் கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை ரூ.37 கோடி செலவில் கண்ணாடி நடைபாதை பாலம் அமைக்கப்பட உள்ளது. 

இதனையொட்டி அந்த பகுதிக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் எ.வ.வேலு, அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் அதிகாரிகள் இன்று படகு மூலம் சென்று நேரில் ஆய்வு செய்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, பாலப் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும், பிரிட்டிஷ் காலத்தில் அமைக்கப்பட்டதைப் போல, பாறைகளில் இரும்பு தூண்களை நிறுத்தி மிக உறுதியான முறையில் கண்ணாடி நடைபாதை பாலம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

Next Story