பாகூர் கொம்யூனில் ரூ.1½ கோடி வரி வசூல்


பாகூர் கொம்யூனில் ரூ.1½ கோடி வரி வசூல்
x
தினத்தந்தி 26 March 2022 9:59 PM IST (Updated: 26 March 2022 9:59 PM IST)
t-max-icont-min-icon

பாகூர் கொம்யூனில் ரூ.1½ கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

பாகூர் கொம்யூனில் ரூ.1½ கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
ரூ.1½ கோடி வரி வசூல் 
பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தீவிரமாக வரிவசூல் செய்யப்பட்டு வருகிறது. வரி செலுத்துவதற்கு வசதியாக அனைத்து கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. மேலும் ஒலி பெருக்கி மூலமும் வரி செலுத்த ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்தனர். 
பாகூர் கொம்யூனில் இதுவரை வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி பாக்கியாக ரூ.5 கோடி இருந்து வந்தது. பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் எடுத்த நடவடிக்கையின் காரணமாக தற்போது ரூ.1½ கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. 
குடிநீர் இணைப்பு
இன்று மூர்த்திக்குப்பம் காலனி பகுதியில் வரி வசூல் முகாம் சிறப்பு முகாம் நடந்தது. இதனை ஆணையர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். முகாமில் புதிதாக 25 பேருக்கு குடிநீர் இணைப்பு பெற அனுமதி கடிதம் வழங்கப்பட்டது.
மேலும் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் அனைத்து கிராமத்திற்க்கும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கும் வகையில் பாக்கி தொகையை செலுத்தி அபராதத்தை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்தார். முகாமில் மேலாளர் ரவி மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story