புதுச்சேரியில் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்


புதுச்சேரியில் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்
x
தினத்தந்தி 26 March 2022 10:04 PM IST (Updated: 26 March 2022 10:04 PM IST)
t-max-icont-min-icon

புதுவை காவல்துறையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுவை காவல்துறையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இடமாற்றம்
புதுவை காவல்துறையில் சமீபத்தில் போலீஸ் சூப்பிரண்டுகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். தற்போது 24 இன்ஸ்பெக்டர்கள், 28 சப்-இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கணேஷ் பாகூருக்கும், லாஸ்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் நெட்டப்பாக்கத்துக்கும், ஏனாம் இன்ஸ்பெக்டர் அறிவுசெல்வம் திருநள்ளாறுக்கும், ஏனாம் கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் கவுதம் சிவகணேஷ் ஏனாம் காவல்நிலையத்துக்கும், திருநள்ளாறு இன்ஸ்பெக்டர் லெனின்பாரதி டி.ஆர். பட்டினத்துக்கும், நெட்டப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கணேசன் புதுவை தெற்கு போக்குவரத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோஜ் சிக்மா பிரிவுக்கும், சி.ஐ.டி.இன்ஸ்பெக்டர் சண்முகம் வடக்கு போக்குவரத்துக்கும், கடலோர காவல்படை டி.செந்தில்குமார் கோட்டுச்சேரிக்கும், காரைக்கால் சிறப்பு பிரிவு செந்தில்குமார் லாஸ்பேட்டை காவல்நிலையத்துக்கும், சிறப்பு அதிரடிப்படை இனியன் முதலியார்பேட்டைக்கும், அங்கு பணியாற்றிய சுரேஷ்பாபு சி.பி.சி.ஐ.டி.க்கும், முத்தியால்பேட்டை கார்த்திகேயன் ஒதியஞ்சாலைக்கும், சிக்மா செக்யூரிட்டி பாலமுருகன் கோரிமேட்டிற்கும், அங்கு பணியாற்றிய நாகராஜன் முத்தியால்பேட்டைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பாகூர்
உணவு கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றி வந்த சிவ ஜான்சன் கென்னடி மேற்கு போக்குவரத்துக்கும், அங்கு பணியாற்றிய பிரான்சிஸ் டொமினிக் உணவு கடத்தல் தடுப்பு பிரிவுக்கும், பாகூரில் பணியாற்றிய வரதராஜன் சிறப்பு பிரிவுக்கும், டி.ஆர்.பட்டினத்தில் பணியாற்றிய பி.தனசேகரன் புதுவை கடலோர காவல் பிரிவுக்கும், காரைக்கால் கடலோர காவல் பிரிவு மர்தினிக்கு காரைக்கால் சிறப்பு பிரிவு கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன பிரிவில் பணியாற்றும் கிட்டி சத்யநாராயணா பண்டக பிரிவுக்கும், அங்கு பணியாற்றிய சேகர் பி.சி.ஆர். பிரிவுக்கும், தெற்கு போக்குவரத்து பிரிவில் பணியாற்றிய கீர்த்திவர்மன் கிழக்கு போக்குவரத்துக்கும், வில்லியனூரில் பணியாற்றிய ராமு போலீசார் மீதான புகார்களை விசாரிக்கும் பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
சப்-இன்ஸ்பெக்டர்கள்
இதேபோல் 28 சப்-இன்ஸ்பெக்டர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை காவல்துறை தலைமையக போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் வெளியிட்டுள்ளார்.

Next Story