கடலோர பகுதிகளில் மது அருந்தினால் கடும் நடவடிக்கை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா எச்சரிக்கை
கடலோர பகுதிகளில் மது அருந்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி
கடலோர பகுதிகளில் மது அருந்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நல்லுறவு கூட்டம்
புதுச்சேரி முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் போலீஸ்-மீனவ பிரதிநிதிகள் நல்லுறவு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா தலைமை தாங்கினார். இதில் இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவபிரகாசம், முருகன், ஜான்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் குருசுக்குப்பம், சோலைநகர், வைத்திக்குப்பம், கனகசெட்டிக்குளம், பிள்ளைச்சாவடி, காலாப்பட்டு, பெரிய காலாப்பட்டு, சின்னகாலாப்பட்டு ஆகிய மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவ பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.
போதை பொருட்கள் நடமாட்டம்
கூட்டத்தில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா பேசுகையில், மீனவ கிராமங்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் தகவல் கொடுக்க வேண்டும். போலீசார் உரிய விசாரணை நடத்தி அந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பார்கள். மீனவ கிராமங்களில் உள்ளூர் பஞ்சாயத்துக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும்.
அதேபோல் கடலோர பகுதிகளில் மது அருந்தக்கூடாது. தடையை மீறி மரு அருந்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கடலோரங்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுக்க வேண்டும். தகவல் தெரிவிப்பவர்கள் விவரம் ரகசியம் காக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story