தடை செய்யப்பட்ட லாட்டரி விற்ற 5 பேர் கைது


தடை செய்யப்பட்ட லாட்டரி விற்ற 5 பேர் கைது
x
தினத்தந்தி 26 March 2022 11:43 PM IST (Updated: 26 March 2022 11:43 PM IST)
t-max-icont-min-icon

தவளக்குப்பம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி தவளக்குப்பம் போலீஸ் சரக பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரிகள் செல்போன் மூலமாக விற்பனை செய்யப்படுவதாக போலீஸ் அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.  இதுதொடர்பாக போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்ததில் பூரணாங்குப்பம் போகும் வழியில் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் அருகில் தடை செய்யப்பட்ட லாட்டரி கள்ளத்தனமாக செல்போன் மூலமாக விற்கப்படுவது உறுதி செய்யப்பட்டது. 
இதையடுத்து அங்கு தவளக்குப்பம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக இருந்த 4 பேரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் பூரணாங்குப்பத்தைச்   சேர்ந்த ரமேஷ் என்பவர் வாட்ஸ்-அப் மூலமாக லாட்டரி எண்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார். 
இவருக்கு உடந்தையாக இருந்த வாழுமுனி, அன்பழகன் உள்பட 4 பேர் செயல்பட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இவர்கள் 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 செல்போன்கள், ரூ.1,600 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுவை லாஸ்பேட்டை சாந்திநகரில் லாட்டரி சீட்டு விற்ற ஆனந்தாநகர் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த திருஞானசம்பந்தம் (வயது42) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.11 ஆயிரத்து 990 மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story