பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தை திருடிய வாலிபர்கள்....!


பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தை திருடிய வாலிபர்கள்....!
x
தினத்தந்தி 27 March 2022 11:00 AM IST (Updated: 27 March 2022 10:44 AM IST)
t-max-icont-min-icon

நாகை அருகே பட்டப்பகலில் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை வாலிபர்கள் பூட்டை உடைத்து திருடிச் சென்றனர்.

நாகை,

நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக செயின் பறிப்பு இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆடுகள் திருட்டு அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் நாகப்பட்டினம் பகுதியில் இருசக்கர வாகனம் ஒன்றை மர்ம நபர்கள் பட்டப்பகலில் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நாகை டாட்டா நகர் பகுதியைச் சேர்ந்த குமரவேல், இவருடைய இருசக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்தி வைத்துள்ளார். இதனை நோட்டமிட்ட படியே அவ்வழியே சென்ற இரண்டு வாலிபர்கள் லாவகமாக பூட்டை உடைத்து இருசக்கர வாகனத்தை திருடி சென்றுள்ளனர்.

எப்போதும் பரபரப்பாக கூட்டம் மிகுந்து காணப்படும் நாகப்பட்டினம் மையப்பகுதியில் பட்டப்பகலிலேயே இருசக்கர வாகனத்தை இரண்டு வாலிபர்கள் சேர்ந்து திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் இந்த பரபரப்பு சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து குமரவேல் நாகப்பட்டினம் வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகள் கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story