திம்பம் மலைப்பாதையில் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு - வாகன ஓட்டிகள் அவதி...!
திம்பம் மலைப்பாதையில் சாலையின் நடுவே திரும்ப முடியாமல் நின்ற லாரியால் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாளவாடி,
ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதை வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.
தமிழ்நாடு-கர்நாடக இடையே முக்கிய போக்குவரத்தாக உள்ள இந்த பாதையில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
மேலும், இரவு நேரத்தில் சாலையை கடக்கும் வனவிலங்குகள் வாகனத்தில் மோதி உயிரிழப்பதாக கடந்த 10-ம் தேதி முதல் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் பகல் நேரங்களில் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவை இருந்து கர்நாடக மாநிலம் மைசூர்க்கு சென்ற கண்டெய்னர் லாரி திம்பம் மலைப்பாதை 15-வது கொண்டை ஊசி வளைவில் காலை 10 மணியளவில் திரும்பும்போது குறுகிய வளைவில் திரும்ப முடியாமல் நின்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சிறிய வாகனங்கள் சென்று வரும் நிலையில், மற்ற வாகனங்கள் ஏதும் செல்ல முடியவில்லை. பின்னர் அவ்வழியாக வந்த வேறு லாரி டிரைவர் 1 மணி நேர போராட்டத்திக்கு பிறகு லாரியை மீட்டார். அதன் பிறகு வாகங்கள் அனைத்து ஒரே நேத்தில் சென்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Related Tags :
Next Story