சென்னை ஐஐடியில் மாணவிக்கு பாலியல் தொல்லை: மாணவர்களை தேடி தனிப்படை போலீசார் மேற்குவங்கம் விரைவு...!


சென்னை ஐஐடியில் மாணவிக்கு பாலியல் தொல்லை: மாணவர்களை தேடி தனிப்படை போலீசார் மேற்குவங்கம் விரைவு...!
x
தினத்தந்தி 27 March 2022 8:25 PM IST (Updated: 27 March 2022 8:25 PM IST)
t-max-icont-min-icon

சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று ஜனநாயக மாதர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

சென்னை,

சென்னை ஐஐடியில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பட்டியலின மாணவி 2016ஆம் ஆண்டு முதல் வேதியியல் துறையில் பிஹெச்டி படிப்பை மேற்கொண்டு வருகிறார்.

அந்த மாணவி அந்த துறையின் உதவி பேராசிரியர் மற்றும் சக மாணவர்கள் சிலரால் தொடர்ந்து பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு உள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு அவர் சேர்ந்ததில் இருந்தே அவர் இந்த பிரச்சினைக்கு ஆளாக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை ஐஐடியில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்றும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று ஜனநாயக மாதர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், மேற்குவங்க மாணவிக்கு பேராசிரியர்கள் உட்பட 8 பேர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட மாணவர்களை தேடி தனிப்படை போலீசார் இன்று மேற்குவங்கம் விரைந்துள்ளனர்.

Next Story