மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி: மதுரை அணி சாம்பியன்
கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் மதுரை அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
கரூர்,
கரூர் டெக்சிட்டி கூடைப்பந்து கழகம் சார்பில் ஆண்களுக்கான 5-ம் ஆண்டு மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி கடந்த 25-ந் தேதி கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் தொடங்கியது. இதில் கரூர், திருச்சி, கோவை, சென்னை, சேலம், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 24 அணிகள் கலந்து கொண்டனர். கடந்த 3 நாட்களாக நடைபெற்ற போட்டியில் மதுரை அணியும், கரூர் அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.
இறுதி போட்டியில் மதுரை அணி வெற்றி பெற்று முதல் பரிசை தட்டிச் சென்றது. கரூர் அணி 2-ம் பரிசையும், கோவை அணி 3-ம் பரிசையும், சேலம் அணி 4-ம் பரிசையும் பெற்றன.
இவர்களுக்கு பரிசுத்தொகையும், கோப்பையும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட கூடைப்பந்து கழக சேர்மன் தனபதி, தலைவர் கார்த்தி, செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story