திருவள்ளூர் உழவர் சந்தை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கத்தினர்


திருவள்ளூர் உழவர் சந்தை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கத்தினர்
x
தினத்தந்தி 28 March 2022 10:52 AM IST (Updated: 28 March 2022 10:52 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து திருவள்ளூர் உழவர் சந்தை அருகே தொழிற்சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர், 

மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் திருவள்ளூர் உழவர் சந்தை அருகே எ.ஐ.டி.யு.சி மாவட்டத் தலைவர் கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் அங்கன்வாடி, ஊழியர்கள், அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் மாவட்ட தலைவர் ஜெயபால், மாவட்ட துணை செயலாளர் குருமூர்த்தி, மண்டலத் தலைவர் சுந்தர் ராஜன், மாநில பொதுச்செயலாளர் அருண்பிரசாத், உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மறியலில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்டவர்களை திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திர தாசன் திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ் வெங்கடேசன் மற்றும் போலீசார் அவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அழைத்துச் சென்றனர்

Next Story