வளசரவாக்கத்தில் பள்ளி வாகனம் மோதி 2ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு...!


வளசரவாக்கத்தில் பள்ளி வாகனம் மோதி 2ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு...!
x
தினத்தந்தி 28 March 2022 12:16 PM IST (Updated: 28 March 2022 1:02 PM IST)
t-max-icont-min-icon

வளசரவாக்கத்தில் பள்ளி வாகனம் மோதி 2ஆம் வகுப்பு மாணவன் பள்ளி வளாகத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சென்னை,

சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகர் பகுதியில் வெங்கடேஸ்வரா என்ற தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் திஷித் என்ற மாணவர் இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், இன்று திஷித் வழக்கம் போல பள்ளிக்கு வேனில் சென்றுள்ளார். பள்ளியை சென்ற பின் வேனில் இருந்து இறங்கி வகுப்பறைக்குள் சென்ற திஷித் வேனில் ஒரு பொருளை மறந்து வைத்து விட்டதாகவும், அதை எடுக்க திஷித் வேனுக்கு சென்ற போது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பள்ளி வளாகத்தில் நின்று கொண்டிருந்த மாணவன் மீது பின்னோக்கி வந்த வேன் மோதி விபத்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மாணவர் திஷித் பள்ளி வளாகத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்து குறித்து வாகன ஓட்டுநர் பூங்காவனத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மாவட்ட கல்வி அதிகாரி மார்க்ஸ் பள்ளியில் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் பள்ளி வாகனம் மோதியதில் 2ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் குறித்து மாவட்ட கல்வி அலுவலர் அறிக்கை அளிக்க மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார்.

பள்ளி வளாகத்திலேயே, பள்ளி வாகனம் மோதி 2-ம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏறபடுத்தியுள்ளது.

Next Story