பொதுமக்கள் நலன் கருதி நாளை 60% அரசு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிப்பு
தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தால் பலர் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளி,கல்லூரி,அலுவலகத்திற்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சென்னை,
நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொது வேலை நிறுத்தப் போராட்டம் இன்று காலை முதல் நடைபெற்று வருகின்றது.
பொது வேலைநிறுத்தம் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் பஸ்கள் குறைந்த அளவே இயக்கப்படுவதால் பள்ளி,கல்லூரி மாணவர்கள்,வேலைக்கு செல்பவர்கள் என பலர் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளி,கல்லூரி,அலுவலகத்திற்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் தொமுச பொருளாளர் நடராஜன் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
போராட்டம் நாளை தொடர்ந்தாலும் 60% அரசு பேருந்துகள் இயக்கப்படும். முன்னணி நிர்வாகிகள் நாளைய போராட்டத்தில் கலந்து கொள்வார்கள். பொதுமக்களின் நலன் கருதி நாளை வழக்கம் போல் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி சாதாரண ஊழியர்கள் வழக்கம்போல் பணிக்கு செல்வார்கள். போராட்டாம் நாளை தொடர்ந்தாலும் தமிழகத்தில் நாளை 60% அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story