புதுக்கோட்டை: தாயை கொன்ற மகனுக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை..!


புதுக்கோட்டை: தாயை கொன்ற மகனுக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை..!
x
தினத்தந்தி 28 March 2022 2:27 PM IST (Updated: 28 March 2022 2:27 PM IST)
t-max-icont-min-icon

தாயை கொன்ற மகனுக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் மருதந்தலை கிராமத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், குடிக்க பணம் கொடுக்க மறுத்த தாயை, மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து மகன் கொலை செய்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் தாயை எரித்து கொன்ற மகன் சந்தோஷ் குமாரை போலீசார் கைது செய்து, புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது குடிக்க பணம் கொடுக்க மறுத்த தாயை கொன்ற மகன் சந்தோஷ் குமாருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்பளித்தார். தவறை உணரும் வகையில் 3 மாதம் தனிமை சிறையில் அடைக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Next Story